கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி

5

சென்னை: ''கச்சத்தீவு தீர்மானம் என்பது நாடகம், மீனவர்களுக்கு தி.மு.க., துரோகம் செய்கிறது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை, சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரத்தில் முழுமையாக பேச அனுமதிக்கவில்லை. தேர்தலை நோக்கமாக கொண்டு தான் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தீர்கள்; அப்போது ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை. கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை.



வி.பி.சிங், தேவ கவுடா, வாஜ்பாய், மன்மோகன் உள்ளிட்டோர் பிரதமராக இருந்த போது, தி.மு.க., மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது. அப்போது ஏன் இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை? தேர்தலையொட்டி தீர்மானத்தைக் கொண்டு வந்து மீனவர்களை ஏமாற்ற நாடகம் போடுகின்றனர்.


தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 39 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு பார்லி.,யில் இது தொடர்பாக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இவர்கள் எப்படி மீனவர்கள் மீது அக்கரை கொண்ட கட்சியாக இருக்க முடியும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement