சவாரி ஏற்றுவதில் தகராறு ஓட்டுநரை தாக்கிய சி.பி.ஐ., நிர்வாகி கைது

கொடுங்கையூர், ஏகொடுங்கையூர், முருகப்பா தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம், சின்னாண்டி ஆட்டோ நிறுத்தத்தில் சவாரி பிடிப்பதில், சக ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின், சவாரி முடித்து, அன்றிரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்த 10 பேர் கும்பல், பிரபாகரனை கடுமையாக கைகளால் அடித்து தாக்கினர்.

இதில் பிரபாகரனுக்கு இடது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது; இடது கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பிரபாகரனை தாக்கிய, கொடுங்கையூரைச் சேர்ந்த சி.பி.ஐ., கட்சியின் 34வது வட்ட செயலர், ஆட்டோ ஓட்டுநர் பாபு, 69; மற்றும் விஜயன் பாபு, 42, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement