ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது

ஓட்டேரி, புரசைவாக்கம் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 35. ஆம்புலன்ஸ் ஓட்டுனர். கடந்த 31ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், பொன்னியம்மன் கோவில் தெரு அருகே, டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த மூவர், ராஜேைஷ தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்தனர்.

இதில், முன்விரோதம் காரணமாக ராஜேஷ் தாக்கப்பட்டது தெரிய வந்தது. புரசைவாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 21, சுபாஷ், 19, மற்றும் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ் மற்றும் சுபாைஷ போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அலெக்ைஸ தேடி வருகின்றனர்.

Advertisement