போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்
வண்ணாரப்பேட்டை,
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 52. இவர், பழைய வண்ணாரப்பேட்டை, பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது, சட்டைப்பையில் இருந்த அவரது மொபைல் போனை, மர்ம நபர் திருடி தப்பினார். விஜயகுமார் பகுதிவாசிகள் உதவியுடன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாகுமார் நோனி, 19, என்பதும், பகுதிவாசிகள் துரத்தும்போது மொபைல் போனை தெருவோரத்தில் வீசிவிட்டு ஓடியதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement