பூட்டை உடைத்து நகை திருட்டு

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, புருஷோத்தம்மன் நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவர், கடந்த 29ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மன்னார்குடியில் உள்ள மகனை பார்க்க சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் காலை திரும்பினார்.

இங்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, 7 சவரன் நகை, வெள்ளி கொலுசு, விளக்கு மற்றும் 15,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்த புகாரின்படி, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement