போன் பறித்த இருவர் கைது
கோயம்பேடு, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் அகஸ்டின், 18. இவரது நண்பர்களான மோஷன், முகிலன் ஆகியோருடன், நெற்குன்றம், பெருமாள் கோவில் வழியாக, கடந்த 18ம் தேதி நடந்து சென்றார்.
அப்போது, அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள், அகஸ்டின் மற்றும் நண்பர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவர்களின் இரு மொபைல் போன்களை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், 23, புளியந்தோப்பு பி.கே., காலனியை சேர்ந்த ராஜ்குமார், 23, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, ஒரு மொபைல் போன், ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஆனஸ்ட்ராஜ் பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட, ஐந்து குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!