மகள் காதலை எதிர்த்து தீக்குளிப்பு பெரும்பாக்கத்தில் தாய் உயிரிழப்பு
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜெயா, 45. தம்பதிக்கு திருமணமாகி, 23 ஆண்டுகளாகின்றன. மூன்று மகள்கள் உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், அவரது கணவர் ரவி பிரிந்து சென்று விட்டார். ஜெயா வீட்டு வேலை செய்து, தன் மகள்களை வளர்த்து வந்தார்.
அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் இவரது மூன்றாவது மகள், எதிர் பிளாக்கில் வசிக்கும் வாலிபருடன் பழகி வந்துள்ளார். தாய் கண்டித்தும் கேட்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த ஜெயா, கடந்த, 23ல் தேதி நள்ளிரவு வீட்டில் உள்ள, 'பம்ப் ஸ்டவ்'வில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து, தனக்கு தானே ஊற்றி தீ வைத்து கொண்டார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement