சின்ன சேனியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா கோலாகலம் படம் வரும் 3 காலம் இடம் விடவும்
வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, சிங்கார தோட்டத்தில், சின்ன சேனியம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில், கடல் வழியாக வியாபாரம் செய்ய வந்த தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வங்களான பத்ரகாளியம்மனையும், சேனியம்மனையும் துணைக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலின் 39ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா, மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்னி சட்டி திருவிழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, அக்னி சட்டியை ஏந்தியபடி ஊர்வலமாய் வந்தனர்.
பிரதான நிகழ்வான தேர் திருவிழா இன்று நடக்கிறது. வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement