மாநகராட்சி சொத்து வரி ரூ.2,000 கோடி வசூல்

சென்னை மாநகராட்சியில் 2024 - 25ம் நிதியாண்டில், சொத்துவரி வசூலிக்க, 1,900 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், சொத்துவரி செலுத்தாத, 100 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மேலும், சிறிய அளவிலான சொத்துவரி பாக்கி வைத்திருந்த, 2 லட்சம் பேருக்கும், எளிதில் சொத்துவரி செலுத்தும் வகையில், 'க்யூ.ஆர்., குறியீடு' அடங்கிய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, சொத்து வரி வசூலிக்கப்பட்டது.

இதுவரை, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 550 கோடி ரூபாய் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி வசூலில் பெரும்தொகை, 2,231.21 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுகிறது. வரும் நிதியாண்டில், 2,020 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement