நடைபாதையில் பேனர் பாதசாரிகள் அதிருப்தி

அரும்பாக்கம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா, அண்ணா நகரில் இன்று மாலை நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 30 அடி துாரம் இடைவெளியில் சாலை முழுதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர் வைத்துள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பேனர், விளம்பர தட்டிகள் வைப்பதால், விபத்து நிகழ்ந்து சாலையில் செல்வோர் உயிரிழக்கும் சம்பவம், பலமுறை நடந்துள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் கண்டித்தும், கட்சியினர் கவலைப்படாமல், பேனர், விளம்பர தட்டிகள் வைப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். அதிகாரிகள் இதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement