பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது

அண்ணா நகர்,
அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 48 வயது பெண், கடந்த 29ம் தேதி காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள ஆறாவது அவென்யூவில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

அப்போது, அவ்வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர், பெண்ணை பின் தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில், அப்பெண் பார்க்கும்படி நின்று கொண்டு அந்த வாலிபர், பெண்ணிடம் ஆபாசமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அண்ணா நகர், இசட் பிளாக் பகுதியை சேர்ந்த கேல்வின், 26, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement