அரசு பள்ளி ஆண்டு விழாவில்சிறுவர்கள் எழுதிய நுால் வெளியீடு
அரசு பள்ளி ஆண்டு விழாவில்சிறுவர்கள் எழுதிய நுால் வெளியீடு
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே குழிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதிய, மூன்று கையெழுத்து பிரதி நுால்களை பென்னாகரம் ஏ.இ.ஓ., துளசிராமன் வெளியிட்டார். மாணவி ஸ்ருத்திகா எழுதிய, 'என் காடு, என் மக்கள்', பவுனம்மாள் எழுதிய, 'குருவியின் வீடு', மகாலட்சுமி எழுதிய, 'எனது கதை' ஆகிய மூன்று நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் முனுசாமி முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் பேசுகையில், ''இந்த சிறு வயதில் மாணவர்கள் படைப்பாற்றலோடு வளர்வது பாராட்டுக்குரியது கல்விதான் நம் அடையாளம். கல்விதான் அனைவருக்கும் உயர்வையும் மரியாதையும் தரும். அந்த அழிக்க முடியாத சொத்தை. மாணவர்கள் அனைவரும் பெற்று வாழ்வில் உயர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து பொதுமக்கள் புரவலர் நிதி செலுத்தி பள்ளியில் இணைந்துக் கொண்டனர். ஆண்டு விழாவில் மாணவர்கள் பேச்சு, பாடல், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளியில் படித்து இப்போது உயர் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நந்தினி இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் விஜயசாந்தி, திவ்யா அம்பிகா மற்றும் ஊர்மக்கள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டு, ஆண்டுவிழாவை சிறப்பித்தனர்.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!