ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை
ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை
பஞ்சபள்ளி:பஞ்சபள்ளி அருகே, ஜெல் திம்மனுார் ஆற்றின் குறுக்கே, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டும் பணிக்கான, பூமி பூஜை நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை, ஜெல் திம்மனுார் ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டி கால்வாய் வழியாக, அமானிமல்லாபுரம் ஏரி, பஞ்சப்பள்ளி ஏரி, சாமனுார் ஏரி உட்பட, 15 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்ல வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ஏரிகளுக்கு நீரை பிரித்து அனுப்பும் வகையில், நீர்வளத்துறை நிதியிலிருந்து, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தடுப்பணை கட்ட பூமி பூஜை, அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், நகர செயலாளர் ராஜா, முன்னாள் பஞ்., கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!