மூதாட்டியிடம் 5.5 பவுன் நகை பறிப்பு

சேலம்,: சேலம், காரிப்பட்டி மின்னாம்பள்ளி பெருமாள் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, 70. இவருடைய இரண்டு ஏக்கர் நிலம், மேட்டுக்காடு பகுதியில் உள்ளது.


அந்த இடத்தில் குடிசை அமைத்து தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ருக்மணி துாங்க சென்ற போது, குடிசை அருகே மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், குடிசை உள்ளே புகுந்து மூதாட்டி அணிந்திருந்த, 5.5 பவுன் செயினை பறித்து சென்று தப்-பினார்.


இது குறித்து, காரிப்பட்டி போலீசில் ருக்மணி அளித்த புகார்படி, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement