கிழிந்த ஓலை கூரை... உடைந்த கம்பு...போக்குவரத்து நெரிசல்; கல்லார் இ- -பாஸ் சோதனை சாவடியின் அவல நிலை

மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டம் செல்ல, மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சோதனை சாவடியில், இ--பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. உடைந்த கம்பு, கிழிந்த ஓலை கூரை என, சரியும் நிலையில் உள்ள இ--பாஸ் சோதனை சாவடியின் நிலையை கண்டு சுற்றுலா பயணியர் அச்ச மடைந்தனர்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல, இ-பாஸ் முறை கடந்த ஆண்டு மே 7 முதல் அமலில் உள்ளது. நேற்று முதல் இம்மாவட்டங்களுக்கு தினமும் 6,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 12 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை நேற்று தீவிரமாக நடந்தது.
கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில், மேட்டுப்பாளையம் அருகே கல்லார் துாரிப்பாலத்தில், இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ--பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதனால், சோதனை சாவடியில் பெருங்கூட்டம் கூடியது.
சர்வர் கோளாறு, வருவாய் துறை ஊழியர்கள் பற்றாக்குறை போன்றவற்றால், கல்லார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணியர், இ--பாஸ் சோதனை அலுவலர்கள், போலீசார் என அனைவரும், கிழிந்து தொங்கும் ஓலை மேற்கூரைக்கு கீழே நின்று தான் தங்களது பணிகளை செய்கின்றனர்.
உடைந்த கம்புகள், கிழிந்த ஓலைகள் என சரியும் நிலையில் உள்ள சோதனை சாவடியின் மேற்கூரையை கண்டு சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர்.
ஆட்கள் பற்றாக்குறை
வருவாய் துறையினர் சார்பில், இ--பாஸ் செக் செய்வது, பிளாஸ்டிக் பாட்டில் பறிமுதல் செய்வது, பசுமை வரி வசூலிப்பது என இப்பணிகளுக்கு 5 முதல் 7 பேர் வரை மட்டுமே உள்ளனர். தேவையான ஊழியர்கள் இல்லாததால் இ--பாஸ் சோதனை பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
அரசு பஸ், ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்கள், நீலகிரி மாவட்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ--பாஸ் தேவையில்லை. கல்லார் இ--பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ--பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி சோதனை செய்யும் வகையில், இந்த பூம் பேரியர் அமைய உள்ளது. அடுத்த வாரம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் பணியில் ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
-லட்சுமி பவ்யா தண்ணிரூ,
கலெக்டர்,
நீலகிரி மாவட்டம்
மேலும்
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை