அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு

வாஷிங்டன்: ''அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்'' என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது.
அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதால் ஏற்படும் வர்த்தக சமநிலை இல்லாமைக்கு தீர்வு காண்பதாக கூறி, இந்தியா உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் வரி விதித்திருக்கிறார். அதில், இந்திய பொருட்களுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில், ''புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்'' என ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது.
இது குறித்து, இந்த நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் மைக்கேல் பெரோலி கூறியதாவது: புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதார மந்தநிலை ஏற்படும். வேலையின்மை விகிதம் 5.3 சதவீதம் வரை அதிகரிக்கும்.
மற்ற நாடுகளின் வரிகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவிற்கு 26 சதவீத வரி நியாயமானது. பலவீனமான அமெரிக்க பொருளாதாரம் காரணமாக, இந்திய ஐ.டி., துறையில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிரம்பின் புதிய வரி விதிப்பு குறித்து பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: புதிய வரி விதிப்பு முன்பு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அதிக பணவீக்கம் ஏற்பட இதுவே உண்மையான காரணமாக அமையும் என்றார்.




மேலும்
-
இலங்கையில் தமிழ் அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
-
இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: ம.பி.,யில் 7 பேர் உயிரிழந்த சோகம்
-
திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்கள்: மனம் திறந்தார் ஒபாமா
-
இலங்கையின் உயரிய விருது சிறப்புகள் என்ன? இதோ முழு விபரம்!
-
மக்கள் அரசியலில் இது அவசியம் இல்லாதது; விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்
-
சென்னை அணிக்கு 184 ரன்கள் இலக்கு; கே.எல்.ராகுல் அரைசதம்