கண்டாச்சிபுரத்தில் பால்குட ஊர்வலம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றம் சக்திவேல் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணியளவில் 108 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் சக்திவேல் முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, நேர்த்திக் கடன் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கண்டாச்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர். இரவு மயில் வாகனத்தில் உற்சவ மூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சி; தலைவராக ஹிந்து பெண் தேர்வு: மத ஒற்றுமைக்கு உதாரணம்
-
ரூ.40 கோடி சம்பளத்துக்கு கணக்கு சொல்லுங்க; 'எம்புரான்' இயக்குநர் பிருத்விராஜுக்கு ஐ.டி.நோட்டீஸ்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 11 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
Advertisement
Advertisement