ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது

1

சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் டில்லி பாபு கைது செய்யப்பட்டார்.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்து வருகிறது. தினந்தோறும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.


அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதையடுத்து பெண் அளித்த புகார் படி, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டில்லி பாபுவை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ரயில், ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் குற்றங்களால் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement