டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்

இன்ச்சான்: தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில், உலகத்தரவரிசையில் 32வது இடத்திலுள்ள இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 'நம்பர்-7' ஆக உள்ள சீனாவின் மான் குவாய் மோதினர்.
முதல் செட்டை 11-9 என வசப்படுத்திய ஸ்ரீஜா, அடுத்த செட்டை 10-12 என இழந்தார். மூன்றாவது செட்டை ஸ்ரீஜா 11-7 என கைப்பற்ற, 2-1 என முன்னிலை பெற்றார். கடைசி இரு செட்டுகளை 5-11, 2-11 என இழந்தார். முடிவில் ஸ்ரீஜா, 2-3 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

Advertisement