இந்திய வீரர்கள் அபாரம் * குத்துச்சண்டை உலக கோப்பையில்...

புதுடில்லி: உலக குத்துச்சண்டை கோப்பை அரையிறுதிக்கு இந்தியாவின் மணிஷ், ஹிதேஷ், அபினாஷ் முன்னேறினர்.
பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர்.
55 கிலோ காலிறுதியில் இந்திய வீரர் மணிஷ் ரத்தோர், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவின் யூசுப் சோதியாவை எதிர்கொண்டார். மணிஷ் 3-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
65 கிலோ பிரிவு காலிறுதியில், இந்தியாவின் அபினாஷ், ஜெர்மனியின் டெனிஸ் பிரிலை சந்தித்தார். இதில் ஆதிக்கம் செலுத்திய அபினாஷ், 5-0 என சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் (70 கிலோ), இத்தாலியின் கேபிரியலி ரன்டானியை 5-0 என வீழ்த்தினார்.

Advertisement