சென்னை அணியில் மும்பை வீரர்

1

சென்னை: மும்பையின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு சென்னை அணி அழைப்பு விடுத்துள்ளது.
பிரிமியர் தொடரில் சென்னை அணி தடுமாறுகிறது. புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இளம் வீரரை சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதற்காக, மும்பை அணியின் 17 வயது, ஆயுஷ் மாத்ரேவை, தகுதி முகாமில் பங்கேற்க வருமாறு சென்னை அணி அழைத்துள்ளது. தற்போது குஜராத்தின் சவுராஷ்டிராவில் பயிற்சி முகாமில் இருக்கும் ஆயுஷ், சென்னைக்கு கிளம்புகிறார்.
சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,'' உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் ஆயுஷ். இதனால் வீரர்கள் தகுதி முகாமில் பங்கேற்க அழைத்துள்ளோம். தேவைப்பட்டால் மட்டும் அணியில் சேர்ப்போம்,'' என்றார்.
தேர்வு எப்படி
பிரிமியர் விதிப்படி, வீரர்கள் காயமடையும் பட்சத்தில் புதியதாக வீரரை ஒப்பந்தம் செய்யலாம். ஆயுஷ் கடந்த நவம்பர் மாதம் சென்னை அணிக்கான முகாமில் பங்கேற்றார். அடுத்து நடந்த ஏலத்தில் இவரை யாரும் வாங்கவில்லை. தற்போது மீண்டும் அழைத்துள்ளதால், விரைவில் சென்னை அணியில் இணையலாம்.

117 பந்தில்...
'லிஸ்ட் ஏ' போட்டியில் இளம் வயதில் (17 வயது, 168 நாள்) 150 ரன்னுக்கும் மேல் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார் ஆயுஷ். சமீபத்திய விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய இவர், 117 பந்தில் 181 ரன் விளாசினார். இதில் 7 போட்டியில் 458 ரன் (சராசரி 65.42 ரன்) விளாசினார். ரஞ்சி கோப்பையில் 8 போட்டியில் 471 ரன் (33.64) எடுத்தார்.

Advertisement