கொளப்பாக்கத்தில் குவிந்த குப்பை கழிவு அகற்றம்

சென்னை,
சென்னை விமான நிலையத்தின் பின்புறம், கொளப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அண்ணா பிரதான சாலை காலி இடங்களில், குப்பை கழிவு அதிகம் கொட்டப்பட்டு வந்தது.

இறைச்சி, குப்பை, பிளாஸ்டிக் கழிவு அதிகம் கொட்டப்பட்டன. இறந்த கால்நடை சடலங்களும் வீசப்பட்டன.

குப்பை கழிவில் உணவு உண்ண பறவைகள் வானில் வட்டமடிப்பதால், விமான நிலைய ஓடுபாதைக்கு சென்று விமானங்களில் மோதினால், பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்தது.

அதனால் குப்பை கழிவை உடனடியாக அகற்ற வேண்டும் என, நம் நாளிதழில் மார்ச் 27, ஏப்., 1ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கொளப்பாக்கம் ஊராட்சி அதிகாரிகள், அண்ணா பிரதான சாலை பின்புறத்தில் உள்ள காலியிடங்களில் தேங்கி கிடந்த குப்பை, கால்நடை சடலங்களை முற்றிலும் அகற்றினர்.

வரும் நாட்களில், எந்தவித குப்பை கழிவையையும், விமான நிலையம் சுற்றியுள்ள இடத்தில் கொடக்கூடாது என, ஏ.ஏ.ஐ., அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Advertisement