ஏர்போர்ட் ப்ரீபெய்டு டாக்ஸி ஓட்டுனர்கள் மீது புகார்

சென்னை,சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய ப்ரீபெய்ட் டாக்ஸி, ஓலா, உபேர் போன்ற செயலிகள் வாயிலாக, பயணியர் புக்கிங் செய்து செல்லலாம்.

விமான நிலைய ப்ரீபெய்ட் டாக்ஸிக்கென தனியாக கவுன்டர்கள் செயல்படுகின்றன. அங்கு, செல்ல வேண்டிய இடத்துக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி பயணம் செய்ய முடியும்.

இந்நிலையில், முறையாக ரசீது தராமல், சில ஓட்டுநர்கள் அதிக தொகை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பயணி ஒருவரின் எக்ஸ் தள பதிவு:

விமானத்தில் இருந்து தரையிறங்கியதும், பெரம்பூர் செல்ல, அருகில் இருந்த ப்ரீபெய்ட் டாக்ஸி கவுன்டருக்கு சென்று விசாரித்தேன்.

முதலில், 1,200 ரூபாய் கட்டணம் என்றனர். ஆனால், அங்கு இருந்த மற்றொரு ஊழியர், ரசீது தருவதற்கு 'பிரின்டர்' வேலை செய்யாததால், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற பின் பணம் செலுத்தலாம் என்றார்.

பின், வீடு வந்தடைந்ததும், ஓட்டுநர் 1,700 கட்டணம் என்று சொல்லி ரசீதை தந்தார். இது, 20 கி.மீ., பயணத்திற்கு மிக அதிகம்.

மற்ற செயலியில், வெறும் 599 ரூபாய் மட்டுமே. இப்படி ஏமாற்றும், ப்ரீபெய்டு டாக்ஸி ஓட்டுநர்கள் மீது, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement