பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து

ஆவடி, ஆவடியை அடுத்த புதிய வெள்ளானுார், குருநானக் நகரில், 'ஸ்ரீ கணபதி ரொட்டோ' என்ற பெயரில், பிளாஸ்டிக் கவர்கள் மீது பிரிண்டிங் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதை, பாஸ்கர், 43, என்பவர் எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில், 15 ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று மாலை, 4:00 மணி அளவில், மின் கசிவால் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில், கம்பெனி முழுதும் பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி, அம்பத்துார், செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெஷின் மற்றும் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்