ஜெ.ஜி.ஹிந்து வித்யாலயா குழுமத்தின் 31 மாணவர்களுக்கு மத்திய அரசு உதவி

சென்னை, ஜெ.ஜி.ஹிந்து வித்யாலயா குழும பள்ளிகளின் மாணவர்கள், 31 பேருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து, ஜெ.ஜி.ஹிந்து வித்யாலயா குழும பள்ளிகளின் செயலர் கிரிஜா சேஷாத்ரி கூறியதாவது:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றும் வகையில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற தகுதியுடைய பள்ளியாக, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஏற்கனவே தேர்வானது.

இந்த உதவித்தொகைக்காக, பள்ளியில் படிக்கும் 30 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களில், 9 ம் வகுப்பு படிக்கும் ஏழு பேருக்கு, 67,900 ரூபாய்; பிளஸ் 1 படிக்கும் 11 பேருக்கு, 74,400 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகர்கோவில் எஸ்.என்.எம்.ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் 13 பேருக்கு, 24,000 ரூபாய்; பிளஸ் 1 படிக்கம் எட்டு பேருக்கு, 29,000 ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

***

Advertisement