பாலாறு குழாயில் உடைப்பு 3 மாதமாக வீணாகும் குடிநீர்

படப்பை, தாம்பரம் மாநகராட்சிக்கு வாலாஜாபாத் அருகே, பாலாற்றில் இருந்து குழாய் வாயிலாக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த குழாய், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம், செரப்பணஞ்சேரி, படப்பை வழியே தாம்பரம் செல்கிறது.
இந்த குழாயில், அழுத்தம் காரணமாக, படப்பை அருகே இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
இதனால், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
Advertisement
Advertisement