மாநகர பேருந்து மோதி பிராட்வேயில் மூதாட்டி பலி
பிராட்வே, துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 50. இவரது பேத்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பேத்திக்கு உணவு கொடுக்க வந்த மூதாட்டி, மாநகர பேருந்து வாயிலாக வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு, பிராட்வே பேருந்து நிலையம் வந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற போது, திருவேற்காடு செல்லும் தடம் எண்: எம் - 50 என்ற மாநகர பேருந்தின் பக்கவாட்டு பகுதி, மூதாட்டி மீது உரசியது.
இதில் நிலைதடுமாறி விழுந்த அவர் மீது, அதே மாநகர பேருந்தின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநரான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தணிகைவேல், 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்