பொது - ஏரியில் மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்

படப்பை,
படப்பை அருகே, வடமேல்பாக்கம் ஏரியில், அரசு அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக, புகார் வந்தது. இதையடுத்து, மணிமங்கலம் போலீசார் நேற்று, அங்கு சென்றனர்.

அப்போது, ஏரியில் மண் அள்ளிச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் வடமாலை, 40, விஜய், 27, ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement