ரவுடி துாக்கிட்டு தற்கொலை

தண்டையார்பேட்டைபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலை, பெத்தானியா தோட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெயசிங், 42. இவர் மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 28 வழக்குகள் உள்ளன.
மாவா விற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற அவர், இரு மாதங்களுக்கு முன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து, குடும்பத்துடன், சுப்புராயன் தெருவில் வசித்த வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் தன் மனைவியிடம் தகராறு செய்து, அடித்துள்ளார். பின், வீட்டின் படுக்கையறைக்கு சென்று உள்பக்கம் பூட்டியவர், வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.
சந்தேகத்தில், மனைவி, மகள், மருமகன் ஆகியோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது, ஜன்னல் கம்பியில், நைலான் கயிற்றால் துாக்கிட்டு தொங்கினார்.
உறவினர்கள் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், ஜெயசிங் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்