பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை, பட்டினப்பாக்கம் - சாந்தோம் சாலையை இரு வழிச்சாலையாக மாற்றக்கோரி, மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பட்டினப்பாக்கம் - சாந்தோம் நெடுஞ்சாலையில், இரு வழி வாகன போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை, மீன்பிடித் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மெரினா லுாப் சாலையை, வாகன போக்குவரத்திற்கான சாலை என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், நொச்சிக்குப்பம் பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, நெய்தல் மக்கள் கட்சி தலைவர் பாரதி கூறுகையில்,''மீனவர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், கடலோர பகுதிகளில் அறிவித்துள்ள திட்டங்களை, அரசு திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.
முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர்கள் நல சங்க தலைவர் சேகர் கூறுகையில், ''மூன்று அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தென்சென்னை முழுதும் உள்ள மீனவ மக்களை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.
★★*
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்