பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்

பூந்தமல்லி, குன்றத்துார் அருகே பூந்தண்டலத்தில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி உள்ளது. நேற்று காலை, மாணவர்களை ஏற்றிய கல்லுாரி பேருந்து, மதுரவாயலில் இருந்து குன்றத்துார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

குமணன்சாவடி பகுதியை கடந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற ஐந்து வாகனங்கள் மீது, அடுத்தடுத்து மோதியது. இதில், பேருந்து, வேன், கார், இரண்டு பைக் ஆகிய வாகனங்கள் சேதமாகின.

இந்த விபத்தில் ஒன்பது பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில், தந்தையுடன் பைக்கில் சென்ற ரோகித், 15, என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement