திடீர் மழையால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்
சோழிங்கநல்லுார், சென்னையில் கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை, புறநகர் பகுதிகளில் எதிர்பாராமல் மழை பெய்ததால், சாலைகள் மிகவும் மோசமடைந்தன.
மெட்ரோ ரயில், வடிகால், கால்வாய் கட்டும் பணி, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக, ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால், அதில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியது. பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன.
குறிப்பாக, வேளச்சேரி, மத்திய கைலாஷ், தரமணி, இந்திரா நகர், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், குமரன் நகர் போன்ற பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வழக்கமான நேரத்தில் வேலைக்கு புறப்பட்டோர், தாமதமாக பணி இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் சூழல் உள்ளதால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்