லேடி வெலிங்டன் பள்ளியில் ரூ.3.65 கோடியில் ஆய்வகம்

சென்னை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், படித்த முன்னாள் மாணவர்கள், தனி நபர்கள், பெருநிறுவனங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டார். அதை செயல்படுத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்' உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தில், சென்னை, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'வெர்சுசா' அறக்கட்டளையின் பங்களிப்பில், ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டன.
மொத்தம் 6,600 சதுரடி பரப்பில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 120 இருக்கைகளுடன் கூடிய இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், நவீன சமையலறை, 4,600 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், 60 இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக பணியில் சேர்ந்த ஆறு பேருக்கு, பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், இயக்குனர் கண்ணப்பன், 'வெர்சுசா' அறக்கட்டளையின் துணை செயல் தலைவர் வெங்கடேசன் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்