'சிதம்பரம் தனியார் மருத்துவ கல்லுாரியை அரசுடைமையாக்கியது தேவையற்ற செயல்' அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
சென்னை:''அ.தி.மு.க., ஆட்சியில், சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியை அரசுடைமையாக்கி, புதிய அரசு மருத்துவ கல்லுாரி வர வழியில்லாமல் செய்து விட்டனர்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரத்தில் உள்ள கடலுார் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'ஆஞ்சியோ' பரிசோதனை வசதியும், இதய சிகிச்சை டாக்டர்களும் இல்லை.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், விபத்தில் காயமடைந்தவர்கள் அதிகம் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் டாக்டர்கள் இல்லை.
அமைச்சர் சுப்பிரமணியன்: சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, தனியாரிடம் இருந்து அரசு எடுத்துக் கொண்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அதன் நிர்வாகத்தை சீர்திருத்தும் பணி நடந்து வருகிறது. 12.98 கோடி ரூபாயிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 53.18 கோடி ரூபாயிலான கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லுாரியே கட்டியிருக்கலாம்.
ஆனால், தனியாரிடம் இருந்த கல்லுாரியை அரசுடைமையாக்கி, பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தினர். சமீபத்தில் கூட, 200 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாண்டியன்: எங்களுக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டால், இதய டாக்டர் இல்லை. 'ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட்' செய்யும் வசதி இல்லை. அதை செய்து தாருங்கள்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: கடலுார் அருகில் புதிய மருத்துவ கல்லுாரி கட்ட, தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில், அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியையும், அண்ணாமலை பல்கலையையும் தேவையில்லாமல் அரசுடைமைஆக்கினர்.
அதையும் வீணாக்கி விட்டு, புதிய மருத்துவ கல்லுாரி வர வழியில்லாமல் செய்து விட்டனர்.
அமைச்சர் சுப்பிரமணியன்: இதயநோய் தீவிர சிகிச்சை பிரிவை உருவாக்க, 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
புதிய மருத்துவ கல்லுாரிகள் ஒவ்வொன்றிலும், இதய நோய் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்