கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
சென்னை,வடசென்னையில் எண்ணுார், மணலி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இதனால், கோடை காலத்தில் மின் சாதனங்களில், 'ஓவர்லோடு' ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது.
இந்த பிரச்னையை தவிர்க்க, மணலியில் உள்ள, 110/ 33 கிலோ வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையத்தில், 25 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறன் உடைய பவர் டிரான்ஸ்பார்மருக்கு பதில், 50 எம்.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. இதனால், 45 மெகா வாட் மின்சாரம் வரை கையாளப்படும்.
இதேபோல், எண்ணுாரில், 110/ 11 கி.வோ., துணைமின் நிலையத்தில், 10 எம்.வி.ஏ.,க்கு பதில், 15 எம்.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது.
இதனால், 12 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும்.
ஏற்கனவே, மணலி துணைமின் நிலையத்தில், 25 எம்.வி.ஏ., திறனில் இருந்த மற்றொரு டிரான்ஸ்பார்மர், 50 எம்.வி.ஏ., திறனுக்கும்; எண்ணுார் துணைமின் நிலையத்தில், 10 எம்.வி.ஏ., திறனில் இருந்த டிரான்ஸ்பார்மர், 15 எம்.வி.ஏ., திறனுக்கும் தரம் உயர்த்தப்பட்டு விட்டன.
தற்போது, இரு டிரான்ஸ்பார்மர்களின் திறன் உயர்த்தப்பட்டதால், இரு துணைமின் நிலையங்களிலும், கூடுதல் மின்சாரத்தை கையாள முடியும்.
இதனால், எண்ணுார், மணலி, திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், கூடுதல் மின்சாரத்தை, சீராக வினியோகம் செய்ய முடியும்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்