சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க தேனம்பாக்கத்தினர் வலியுறுத்தல்

தேனம்பாக்கம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, தேனம்பாக்கத்திற்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே, 9.80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறுபாலம் கடந்த ஆண்டு பிப்., 26ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தேனம்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

சிறுபாலத்திற்கு இருபுறமும் பக்கவாட்டில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போதும், மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், வேகவதி ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்திற்கு, பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேனம்பாக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement