நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு

காஞ்சிபுரம்:செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, திருத்தணி செல்லும் சாலை 85 கி.மீ., நீளம் உடையது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இருவழச் சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டு சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக, இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், சில இடங்களில், கடைகளுக்கு செல்லும் வழியை மறித்து தடுப்பு அமைப்பதால், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கடைகளுக்கு செல்லும் பாதையில் தடுப்பு அமைப்பதை நெடுஞ்சாலைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு