பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
சென்னை:''சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை அமைக்கப்படும்; அத்துடன், உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
↓'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான முழக்கமாக, பொதுவுடைமை தத்துவத்தை வடித்து தந்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ். அவரது உருவச்சிலை சென்னையில் அமைக்கப்படும்
↓அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப்புலி என போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவருக்கு, இன்று, 103வது பிறந்த நாள். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், 1923ம் ஆண்டு ஏப்., 4ம் தேதி பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், 1952ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் வென்றார்.
அதன்பின், 1957, 1962, 1967, 1971, 1977 தேர்தல்களில், தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும், 1971ம் ஆண்டு ராமநாதபுரம் லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக பார்லிமென்டில் முழங்கியவர். அவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை