வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,

29

புதுடில்லி: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது.


@1brவக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்த ஆண்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இம்மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தின.


அக்குழுவின் பரிசீலனைக்கு பிறகு நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று ராஜ்யசபாவிலும் விவாதத்திற்கு பிறகு இம்மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்வோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.


இந்நிலையில், அக்கட்சி எம்.பி., முகமது ஜாவித், வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஓவைஸியும் வழக்கு



இதனைத் தொடர்ந்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியும், வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக தெரிவித்து உள்ளார்.


இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர்வோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement