சீரமைக்கப்படாத மழைநீர் கால்வாய்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 13வது வார்டில், பாரதி நகர் உள்ளது. மாவட்டத்திலேயே மழை பாதிப்பு அதிகம் பாதிக்கும் இடமாக, பேரிடர் மேலாண்மை துறை இந்த பகுதியை வரையறை செய்துள்ளது.

அவ்வாறு கண்காணிப்பில் உள்ள இந்த பகுதியில், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின்போது, சேதமான மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் இருப்பதால், அங்கு வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கால்வாய் சேதமாகி, சாலையின் ஒரு பகுதியில் சகதியாக உள்ளது. மழைநீர் வெளியேறவும் முடியாத நிலை உள்ளது.

அதிகாரிகளிடம் 13வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி சார்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க தேவையான நடவடிக்கை இல்லை என்கின்றனர்.

கால்வாயை சீரமைக்க மதிப்பீடு தயார் செய்த போதும், நடவடிக்கை இல்லாததால், ஐந்து மாதங்களாக இப்பணி கிடப்பில் இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement