பாதுகாப்பு இல்லாத கிணறுகம்பி வலை அமைக்கப்படுமா
பாதுகாப்பு இல்லாத கிணறுகம்பி வலை அமைக்கப்படுமா
வெண்ணந்துார்:வடுகம்பாளையம் கிராமத்தில், பயன்பாடில்லாத கிணற்றுக்கு, தடுப்பு கம்பி வலை அமைக்க வேண்டும்.வெண்ணந்துார் ஒன்றியம், மின்னக்கல் பஞ்., வடுகம்பாளையம் கிராமம், 7-வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, திறந்த
வெளி பொது கிணறு உள்ளது. கிணற்று நீரை, பல ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தினர். நாளடைவில், முறையான பராமரிப்பு இல்லாததால், கிணறு பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்டது. இருப்பினும், பள்ளி மாணவர்கள் இடைவேளை நேரத்தில் கிணற்றில் மீன் பிடிக்க செல்கின்றனர்.
கிணற்றின் குறைவான உயரம் உடைய தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. பாதுகாப்பு கம்பி வலையும் அமைக்கப்படவில்லை. கிணறு அருகில் பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் கிணற்றை எட்டி பார்க்கும்போது, தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, கிணற்றின் மீது பாதுகாப்பு தடுப்பு கம்பி வலை அமைக்க வேண்டுமென, அப்
பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை