பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி



பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி


நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நாளை (ஏப்., 5) உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 'என் கல்லுாரி கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி நாளை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவுள்ளனர். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது பெற்றோர், ஆசிரியருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement