நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல்:'சட்டம் சார்ந்த நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் சேர்க்கைக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு, வரும் பொது பயன்பாட்டு சேவை சம்பந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு, சமரசம் பேச நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணியாற்ற உறுப்பினர் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மேலும், போக்குவரத்து சேவை துறை, அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் சம்பந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மருத்துவமனை மற்றும் மருந்தக துறை, காப்பீட்டு துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 62 வயதிற்குட்பட்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும், 9ல், மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ அல்லது 'தலைவர், மாவட்ட சட்டப்
பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல் - 637 003' என்ற முகவரிக்கு, அஞ்சலிலோ அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காங்.,
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை