போட்டா--ஜியோ அமைப்பு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
போட்டா--ஜியோ அமைப்பு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போட்டா--ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவலடி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தலைமை செயலகம் முதல், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வினை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். 7-வது ஊதியகுழு நிர்ணயத்தில், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளர் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்கண்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பொன்.இனியவன் மற்றும் பல்வேறு சங்க
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்