பஸ் மோதிமுதியவர் பலி


பஸ் மோதிமுதியவர் பலி


எருமப்பட்டி:எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 75. இவர் நேற்று காலை, எருமப்பட்டி ஜயர்மேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பணியாளர்களை ஏற்றி வந்த, தனியார் ஸ்பின்னிங் மில் பஸ் முதியவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் உயிரிழந்தார்.
எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement