ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்
ப.பாளையத்தில் அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்
பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயக்காட்டூர் பகுதியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ.81.58 கோடி மதிப்பில், அடுக்கு மாடியில், 520 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடியிருப்பும், 394 சதுர அடியில், ஒரு பல்நோக்கு அறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, ஒரு கழிவறை, குளியலறையுடன் கட்டப்படுகிறது. மேலும் இப்பகுதியில் நுாலகம், சிறுவர் விளையாட்டு பூங்கா, ஐந்து கடைகள், ரேஷன் கடை, வாழ்வாதார மையம், உடற்பயிற்சி கூடம், டூவீலர் நிறுத்தும் இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்த குடியிருப்பு, காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டுமான பணியை, நேற்று கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தையும், நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தையும் ஆய்வு செய்தார்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்