மோசமான சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு

மோசமான சாலையால் ஓட்டுனர்கள் தவிப்பு


கரூர்:கரூர் ரத்தினம் சாலையில், நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கரூர் ரத்தினம் சாலை பகுதியில், மூன்று சாலைகள் பிரிகின்றன. இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. ரத்தினம் சாலையில் இருந்து வெங்கமேடு மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வாகனங்கள், மற்ற இரண்டு சாலைகளில் வாகனங்களுடன் மோதி கொள்கின்றன. போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படும் வகையில் மினி பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். அப்போது பயணிகள் சாலையில் நடக்கும் போது, மேம்பாலத்திருந்து வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில், போலீசார் நிற்பது கிடையாது.
எனவே, போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement