கொசூரில் மோசமான சாலைவாகன ஓட்டிகள் தவிப்பு


கொசூரில் மோசமான சாலைவாகன ஓட்டிகள் தவிப்பு


கரூர்:கொசூர் அருகே அமைக்கப்பட்ட சாலை, சமநிலையில் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்னர்.
கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி பகுதியில் இருந்து, தோகைமலைக்கு பிரதான சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், கொசூர் அருகே அமைக்கப்பட்ட சாலை சமநிலையில் இல்லாமல் உள்ளது. இதனால், சாலையின் பின்னால் அல்லது எதிரே வரும் மற்ற வாகனங்களுக்கு வழி விடும் வகையில் சாலையை விட்டு இறங்கும்போது, நிலை தடுமாறி விபத்து நடந்து வருகிறது.
பகல் நேரத்தை விட, இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கொசூரில் சமனற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைப்பு செய்ய வேண்டும்.

Advertisement