சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை
சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை
கரூர்:கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.
கரூர் அருகே, கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை புதிதாக தார் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. அந்த பகுதியில் அரசு பள்ளி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகளவில் வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை தார் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் திடீரென மழை பெய்த நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கரூர் அருகே கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை, சிமென்ட் கலவை போடப்பட்ட பகுதியில், உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
-
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
-
ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு: அனுமதி கேட்டு துஷ்யந்த் ஸ்ரீதர் மனு
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்