பஸ் மோதி வாலிபர் பலி


பஸ் மோதி வாலிபர் பலி


கரூர்:கரூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார், 27. இவர் நேற்று கரூரில் இருந்து புலியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் குளித்தலையில் இருந்து, கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராம்குமார் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement